100 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நால்வர் கைது!

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் மீன்பிடி படகு ஒன்றின் வலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 9 கிலோ 735 கிராம் ஐஸ் போதைப்பொருளை மன்னார் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள வீரசிங்கவின் பணிப்பில் மன்னார் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி மஞ்சுளாவின் ஆலோசனையில் தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் மேற்படி ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மீன்பிடி படகு ஒன்றில் வலைக்குள் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது டன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் சந்தேக நபர் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் இன்றைய மதிப்பில் 80-100 மில்லியன் ரூபா பெறுமதியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply