வீடு புகுந்து தாக்குதல்: அச்சுவேலி பொலிசாருக்கு எதிராக பதிவான முறைப்பாடு!

மக்களை பாதுகாக்கும் கடமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில், அசட்டையீனமாக செயற்பட்ட அச்சுவேலி பொலிஸார் குறித்து பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளான குடும்பமொன்று, அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் அவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

அச்சுவேலி மேற்கு ஜோன்ராஜா வீதியில் உள்ள வீடு ஒன்று இனந்தெரியாத நபர்களினால், நேற்று செவ்வாய்க்கிழமை அடித்துடைத்து சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கணவர் மற்றும் கைக் குழந்தை ஒன்றுடன் வசித்த வந்த பெண் ஒருவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11:00 மணிளயவில், மூன்று பேர் கொண்ட வீட்டுக்குள் புகுந்து வெளிக்கதவு மற்றும் யன்னல் கண்ணாடிகள் என பல்வேறு உடமைகளை அடித்து உடைத்து சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்னர்.

எனினும் அச்சத்தில் இருந்தவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

எனினும் பொலிஸார் காலை 10:00 மணி ஆகியும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பம் மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் இடம்பெற்றிருந்ததோடு, இந்த சம்பவத்தில் 1இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply