குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு: தோண்டியெடுக்கப்பட்ட ஜனாஸா!

குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு: கொரோனாத் தொற்று அச்சத்தால்
தோண்டியெடுக்கப்பட்டது ஜனாஸா!

புதைக்­கப்­பட்ட ஜனா­ஸா­வொன்று, கொரோ­னாத் தொற்று அச்­சம் கார­ண­மாக மீண்­டும் தோண்டி எடுக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த நப­ரின் இறப்பு சாதா­ரண இறப்­பென்று முத­லில் கரு­தப்­பட்டபோதி­லும், அந்த இறப்பு கொரோ­னா­வால் சம்­ப­வித்­தி­ருக்­க­லாம் என்று சந்தேகிக்கப்பட்டு ஜனாஸா மீண்­டும் தோண்டி எடுக்­கப்­பட்­டுள்­ளது.

புத்­த­ளம் வேப்­ப­மடு பிர­தே­சத்­தி­ லுள்ள மைய­வா­டி­யில் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்ட 56 வய­து­டைய நபர் ஒரு­வ­ரின் ஜனா­ஸாவே, புத்­த­ளம் மாவட்ட நீதிவான் நீதி­மன்ற நீதிவான் அசேல டி சில்வா முன்­னி­லை­யில் தோண்­டி­யெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
கடந்த சனிக்­கி­ழமை 4ஆம் திகதி தனது வீட்­டில் கால­மான குறித்த நப­ரது ஜனாஸா, அன்­றைய தினமே வேப்­ப­மடு பிர­தே­சத்­தி­ லுள்ள முஸ்­லிம் மைய­வா­டி­யில் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­டது. எனி­னும், குறித்த நபர் உயி­ரி­ழந்து இரண்டு நாள்­க­ளின் பின்­னர் அவ­ரது மனைவி (வயது – 51) மற்­றும் அவ­ரது மகள் (வயது – 37) ஆகி­யோர் அடுத்­த­டுத்து உயி­ரி­ழந்­த­னர்.

ஒரே நாளில் உயி­ரி­ழந்த தாய் மற்­றும் மகள் ஆகிய இரு­வ­ரி­ன­தும் ஜனா­ஸாக்­கள், புத்­த­ளம் தள மருத்­து­வ­ம­னை­யின் பிரேத அறை­யில் வைக்­கப்­பட்டு, பி.சி.ஆர். பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. அதன்­போது அவ்­வி­ரு­வ­ருக்­கும் கொரோ­னாத் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. உயி­ரி­ழந்த தாய் மற்­றும் மகள் ஆகிய இரு­வ­ரது ஜனா­ஸாக்­க­ளும் நல்­ல­டக்­கத்­துக்­காக புத்­த­ளத்­தி­லி­ருந்து ஓட்­ட­மா­வ­டிக்கு அனுப்­பப்­பட்­டன.

இந்த நிலை­யில், 4ஆம் திகதி உயி­ரி­ழந்த முஹம்­மட் நிஸ்­தார் (வயது –56) என்­ப­வ­ருக்­கும் கொரோ­னாத் தொற்று இருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் அவரது ஜனாஸா நேற்­று­முன்­தி­னம் தோண்­டி­யெ­டுக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *