தம் சுயவிருப்பில் பதவி விலக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த லொஹான் ரத்வத்தை

அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தாம் சுயவிருப்பில் பதவி விலக ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளார்.

இந்த நிலையில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலியிலிருந்து தொலைபேசியூடாக பணித்துள்ளார்.

அதேபோல், விசாரணைகள் முடியும்வரை லொஹானின் அமைச்சுப் பொறுப்புகள் இடைநிறுத்தப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கோட்டபாயவையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமை தொடர்பில் பல்வேறு தரப்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற காரணத்தினால் பிரதமரின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply