யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 10 இராணுவ சீருடைகளுடன் சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் இன்று மதியம் (20) கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஒரு தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் 10 இராணு சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் வீட்டில் இருத்து சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.