தவறாக விளங்கிய கர்ப்பிணிகள் கருவைக் கலைப்பதற்கு முயற்சி!

தவறாக விளங்கிய கர்ப்பிணிகள் கருவைக் கலைப்பதற்கு முயற்சி!

கொரோனாத் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும்­வரை கர்ப்­பம் தரிப்­பதை ஒரு­வ­ரு­டம் தாம­தப்­ப­டுத்தவேண்­டும் என்று அண்­மை­யில் விசேட வைத்­தி­யர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். அந்த கோரிக்­கை­யைத் தவ­றா­கப் புரிந்­துக் கொண்ட கர்ப்­பிணித் தாய்­மார்­கள் வயிற்­றில் வள­ரும் கருவை கலைப்­ப­தற்கு மருத்­து­வர்­களை நாட ஆரம்­பித்­துள்­ள­னர்
இவ்­வாறு மக­ளிர் மருத்­துவ நிபு­ணர் சனத் லென­ரோல் தெரி­வித்­துள்­ளார்.
இது தொடர்­பில் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது-:

இலங்­கை­யில் கர்ப்­பி­ணித் தாய்­மார்­கள் பலர் தங்­கள் வயிற்­றில் வள­ரும் கருவைக் கலைக்க மருத்­து­வர்­க­ளி­டம் கோரிக்கை விடுக்­கின்­ற­னர். கொரோனாத் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும்வரை கர்ப்­பம் தரிப்­பதை ஒரு வரு­டம் தாம­தப்­ப­டுத்த வேண்டும் என்று அண்­மை­யில் விசேட மருத்­து­வர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். அந்தக் கோரிக்­கை­யைத் தவ­றா­கப் புரிந்­துக் கொண்­ட­மை­யால் கர்ப்­பிணித் தாய்­மார்­கள் வயிற்­றில் வள­ரும் கருவைக் கலைக்க வைத்­தி­யர்­க­ளி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இலங்கைச் சட்­டத்­துக்­க­மைய தாயின் உயி­ருக்கு ஆபத்­தாக இருந்­தால் மாத்­தி­ரமே கருவைக் கலைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. கொரோனாத் தொற்று உல­குக்கு வந்த புதிய நோயா­கும். உல­கம் முழு­வ­தும் அதன் செயற்­பாடு பற்­றிய வரை­ய­றுக்­கப்­பட்ட தர­வு­கள் மாத்­தி­ரமே இன்­ன­மும் உள்­ளது. இன்னும் ஒரு வரு­டத்­துக்­குள் விஞ்­ஞா­னி­கள் அதற்கு புதிய தடுப்­பூசி அல்­லது மருந்தை உரு­வாக்க முடி­யும்.

ஒரு­வ­ருட கர்ப்­பத்­தைத் தாம­தப்­ப­டுத்­து­வது தாய்க்­கும் கருப்­பை­யில் வள­ரும் குழந்­தைக்­கும் நன்­மையை ஏற்­ப­டுத்­தும் என நிபு­ணர் தனது தனிப்­பட்ட கருத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தார். இது தொடர்­பில் தேவை­யற்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­திக் கொள்­ளா­ மல் உட­ன­டி­யாக நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்­கும் தடுப்­பூ­சி­க­ளைப் பெற்­றுக் கொள்­வ­தன் மூலம் வயிற்­றில் வள­ரும் குழந்தை அல்­லது தாய்க்கு கொரோனாத் தொற்­றால் ஏற்­ப­டும் ஆபத்­துக்­க­ளைக் குறைத்­துக்கொள்ளமுடி­யும் – – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *