நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி வழக்கும் பணிகள் மிக வேகமா நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.
முல்லைத்தீவு – அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு, இரண்டாவது டோஸ் சைனோபோர்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந்,நிலையில்,பெருந்திரளான,மக்கள்,இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஆர்வத்துடன் ஏற்றிக்கொள்வதை அவதானிக்ககூடியதாக இருந்தது.
மேலும் குறித்தஇரண்டாவது டோஸ் சைனோபோர்ம் தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாட்டை, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிமனை, இராணுவம் ,மற்றும், இராணுவ வைத்தியர்கள் இணைந்து முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.