
மன்னார் மாவட்டத்தில் தொற்றால் 23 பேர் சாவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 1966 கொரோனாத் தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது மன்னார் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் நேற்றுமுன்தினம் 6 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் மன்னார் பொது மருத்துவமனையில் 5 நபர்களும், விடத்தல்தீவு மருத்துவமனையில் ஒருவரும் என 6 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் – என்றார்.