பண்டாரவளையில் உள்ள கொரோனா வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார அதிகாரி ஒருவர் வைத்தியசாலையின் 4 வது மாடியில் இருந்து கீழே விழுந்து விபதிற்குள்ளாகி உள்ளார்.
இவ்வாறு விபத்திற்கு உள்ளான சுகாதார அதிகாரி இ.சி. ஜி பிரிவிற்கு உட்பட்ட அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில், தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்த ஜன்னலில் இருந்து தவறி கீழே விழுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், இவ் விபத்தில் பலத்த காயமடைந்த அதிகாரி தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.