சினோபார்ம் தடுப்பூசியின் செயற்திறன் தொடர்பில் வெளியான தகவல்

டெல்டா வைரஸ் பிறழ்வுக்கு எதிராக சினோபார்ம் தடுப்பூசி மிகுந்த வினைத்திறனுடன் செயற்படுகின்றமை ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் 95 வீதமானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக டெல்டா பிறழ்வுக்கு எதிராக சிறந்த பெறுபேறுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply