தியாக தீபம் திலீபனின் நினைவு வார ஆரம்ப நாளான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாகி திலீபனுக்கு சற்று முன்னர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கயேந்திரனால், தியாகச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.சுகாஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்