தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களைப்பற்றி சிந்திக்க தெரியாது – கஜேந்திரன்

மக்களைப்பற்றி சிந்திக்க தற்போதைய அரசாங்கத்திற்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கொரோனா முகாமைத்துவத்தில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் கோமாளித்தனமாக நடந்துகொள்கிறது.

மேலும் துறைசார்ந்த சுகாதாரத் தரப்பினரிடம் பொறுப்பை ஒப்படைக்காமல், இனவழிப்பை மேற்கொண்ட இராணுவத்திடம் ஒப்படைத்து பொறுப்பற்ற விதமாக நடந்துகொள்கிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply