அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்; நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணையுங்கள்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சிலரை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லோகான் ரத்வத்த துப்பாக்கிமுனையில் முழந்தாளிட வைத்து பயமுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் முறையீடு மிகவும் பாரதூரமானது என தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர் அமைச்சர் என்ற பதவி நிலையில் உள்ளவர். அதுவும் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்.

அமைச்சுப் பொறுப்பிலுள்ள ஒருவருக்கெதிராக இத்தகைய குற்றச்சாட்டு எப்பொழுதும் இந்த நாட்டில் எழுந்தது கிடையாது.சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் நீதிமன்றக் கட்டளைகளின் பிரகாரமே அங்கு தடுத்து வைக்கப்படுகின்றார்கள்.

அத்தோடு மனிதர்கள் என்ற முறையிலும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையிலும் அரசியல் சாசனத்தின் கீழ் அவர்களுக்கு பல்வேறு உரிமைகள் உண்டு.அரசியல் அதிகாரத்தை எவரும் அவர்களுக்கெதிராக பிரயோகித்து அடாவடித் தனமாக நடந்து கொள்வதற்கு சட்டத்தில் அறவே இடம் இல்லை.

எனினும் அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பினை வகிக்கும் எவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டியவர்கள்.அதற்கு மாறாகரூபவ் சட்டத்தை மீறுபவர் அமைச்சராக இருந்தாலும் அவர் மீது சட்டம் பாய்ந்தே ஆக வேண்டும்.

மேலும் மிகப் பாரதூரமான முறையீடு ஒன்றுரூபவ் குறித்த அமைச்சருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்ரூபவ் அதனை உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை ஜனாதிபதியும்ரூபவ் பிரதமரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.

மனித உரிமைகளில் நம்பிக்கை கொண்டுள்ள சகல அரசியற் கட்சிகளும் சமூக அமைப்புக்களும் இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்தி குரல் கொடுக்க முன்வருவார்கள் என்றும் எதிர்பார்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *