மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் ஒத்துழைக்க வேண்டும் – கருணாகரம்

மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த வாரம் மலையகச் சிறுமி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலே எரியுண்டு மரணித்திருக்கிறார்.

பொறுப்புவாய்ந்த ஒரு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், சமூகத்தை வழிநடத்துபவர் என்ற ரீதியில் மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply