சிறுவர்களுக்கு தேன் எனக் கூறி மதுபானம் அருந்த கொடுத்தவர் கைது

பாடசாலை செல்லும் இரண்டு சிறுவர்களுக்கு தேன் எனக் கூறி மதுபானம் அருந்தக்கொடுத்த சம்பவம் ஒன்று மஹியங்கனை பகுதியில் பதிவாகியுள்ளது.

மஹியங்கனை – கிராந்துருகோட்டை – ரத்கிந்த மஹாவெலி கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுக்கு மதுபானம் அருந்தக்கொடுத்துள்ளார்.

இந்த பகுதியை சேர்ந்த 9 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடைக்கு செல்லும் போது அவர்களை தமது வீட்டுக்கு அழைத்து சந்தேக நபர் அவர்களுக்கு மதுபானம் அருந்தக்கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுவர்களின் கண்கள் சிவந்திருந்தமை மற்றும் நடத்தையில் மாற்றம் என்பவற்றை கொண்டு அவர்களது பெற்றோர் சிறுவர்களுக்கு மது வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துக்கொண்டனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து 58 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply