
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டை ஏவி வட கொரியா பரிசோதனை!
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டை ஏவி பரிசோதனை மேற்கொண்டுள்ளது வடகொரியா. இதனை தென் கொரிய இராணுவமும் உறுதிசெய்துள்ளது. ஏதோ ஒரு பொருள் ஏவப்பட்டுள்ளதாகவும் அது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாமென்று ஜப்பானும் தெரிவித்துள்ளது.
இது ஒரு மூர்க்கத்தனமான செயற்பாடு. பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலான செயற்பாடு என ஜப்பானிய பிரதமர் விமர்சித்துள்ளார்.
ஒரு வார காலத்தினுள் வட கொரியா ஏவுகணைகளை பரீட்சிக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்கவல்ல, நீண்டதூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட, சீர்வேக ஏவுகணையொன்றை வட கொரியா நேற்று முன்தினம் ஏவி பரிசோதனை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.