இலங்கைக்கான விமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக நான்கு புதிய விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவற்றில், பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து இயங்கும் விமானங்களும் உள்நாட்டில் இயங்கும் விமானங்களும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் தினமும் 1,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதருவர் என்று நம்புவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும் சுற்றுலாத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள 32 விமான நிறுவனங்கள் இலங்கைக்கு விமானங்களை இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


