டெல்டா திரிபு 50 வீதமாக அதிகரிக்கும்

கொழும்பில், 30 சதவீதமாக உள்ள டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கதின் தலைவர், விஷேட வைத்தியர் நிபுணர் பத்மா குணரத்ன எச்சரித்துள்ளார்.

இலங்கை, நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை, இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உணரக்கூடியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், பயணக் கட்டுப்பாடுகளில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *