கல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: கற்பித்தல் புறக்கணிப்பு தொடர்கிறது

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையில் இன்று (20) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

வேதனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி தமது தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சருக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.

எனினும், இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில்க கிடைக்கவில்லை என தெரிவித்து, தொடர்ந்தும் தமது தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இன்றைய பேச்சுவார்த்தையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை.

குறித்த இருவரும் இந்த பேச்சுவார்த்தையினை புறக்கணித்ததாக அதிபர் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply