‘கொரோனாவின் 4வது அலையை நாம் நெருங்கியுள்ளோம்’

கொரோனாவின் நான்காவது அலையை நாம் நெருங்கி வருவதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய வைத்தியசாலைக்கு நாள் ஒன்றுக்கு 200 கொரோனா நோயாளர்கள் வருகை தருவதோடு அவர்களின் 100 பேருக்கு ஒக்சிஜன் வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

“வைத்தியசாலை கட்டமைப்பு தொடர்பில் எமக்கு கிடைக்கின்ற தகவலின் அடிப்படையில் நான்காவது அலையின் முதல் பகுதியை நாம் அண்மித்து வருகிறோம் என்பது இலங்கை வைத்திய சங்கம் என்ற அடிப்படையில் நாம் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

தேசிய வைத்தியசாலையின் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்தை போன்றே இக்காலப்பகுதியிலும் அதிகமான நோயாளர்கள் வருகை தருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 நோயாளர்க்ள வருகை தருகின்றனர்.

அவர்களில் 100 பேருக்கு ஒக்சிஜன் தேவை காணப்படுகிறது. கொழும்பு நகர சபைக்குள் 100க்கு 30 வீதமான டெல்டா தொற்றாளர்கள் உள்ளனர். டெல்டா தொற்றுக்குள்ளானவர்களின் எச்சிலில் இந்த வைரஸ் செறிவு அதிகமாக இருக்கும். இந்த டெல்டா திரிபு மிக வேகமாக ஒரு சில வாரங்களிலோ அல்லது ஒரு மாதத்திற்குல்லோ நாடு முழுவதும் பரவலாம். இது நிச்சயம் தெரிந்த ஒரு விடயம். “ என்று கூறியுள்ளார்.

Leave a Reply