கிளிநொச்சியில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்

கிளிநொச்சி – பூநகரி நீர்வழங்கல் திட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (21) காலை முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை (21) காலை 06 மணி முதல் நாளை மறுதினம் (22) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென மாவட்ட பொறியியலாளர் நீர்வழங்கல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூநகரி நீர்த்தாங்கியை கிளிநொச்சி நீர்த்தாங்கியுடன் இணைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால், நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *