ஆசிரியர் பிரச்சினை தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பேச்சு

அதிபர், ஆசிரியர் பிரச்சினை தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சில கடந்த 12ஆம் திகதி முதல் இணையவழி கல்வி நடவடிக்கைகளளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்காக இன்று முற்பகல் கல்வி அமைச்சில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply