மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த 5 பெண் கொள்ளையர்கள் கைது !

<!–

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த 5 பெண் கொள்ளையர்கள் கைது ! – Athavan News

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி வாராந்த சந்தையில் மரக்கறி கொள்வனவு செய்ய சென்ற பெண்; ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலி ஒன்றை அறுத்து கொள்ளையடித்த 5 பெண்களை கைது செய்துள்ள சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) பகல் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வாராந்த சந்தை வழமைபோல இடம்பெற்றது இதன்போது மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அங்கு சென்ற 60 வயதுடைய பெண் ஒருவர் மரக்கறிகளை கொள்வனவு செய்துகொண்டிருந்தபோது அதிகமான சன நெரிசலில் கொள்ளையர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் பாசாங்குடன்  குறித்த பெண்ணின் கழுத்தில் இருந்த ஒரு பவுண் உள்ள தங்க சங்கிலியை அறுத்து எடுத்தபோது அவர் சத்தமிட்டதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர்.

இதனையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை கைது செய்ததுடன் அறுத்தெடுத்த தங்க சங்கிலியை மீட்டதுடன் இதில் கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை டிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 தொடக்கம் 50 வயதுடையவர்கள் எனவும் இவர்களை இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *