
ஆறுமுகன் தொண்டமானின் பிணத்தை வைத்து அரசியலுக்கு வந்தவர்தான் அனுதாபம் தேடி அரசியலுக்கு வந்த ஜீவன் தொண்டமானுக்கு மலையக மக்களின் வேதனை தெரியுமா? என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நேற்றைய தலவாக்கலை போராட்டத்தை கொச்சை படுத்தி பேசியுள்ள ஜீவனுக்கு முதுகெலும்பும் இல்லை சுய புத்தியும் இல்லை. மலையக மக்கள் இன்று விலைவாசியின் உயர்வு காரணமாக வீதியில் இறங்கி போராடுகின்றார்கள்.
அதனால்தான் இவர் சஜித் பிரமதாசவை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கின்றோம் என உளறுகிறார். தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோம் என்று தெரியாமல் உலரும் ஜீவன் தந்தையின் அனுதாபத்தில் பாராளுமன்றம் சென்றவர். மக்களுக்காக செல்லவில்லை என்பது இப்போது தெரிகின்றது. மீண்டும் இவ்வாரான ஜீவன்களை பாராளுமன்றம் அனுப்புவதை விடுத்து மக்களுக்காக அரசியல் செய்யும் ஒருவரை மலையகத்தில் இருந்து அனுப்புவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.