
கண்டி, ரங்கல – எலுகொல்ல பிரதேசத்தில் இன்று காலை 28 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் சிற்றூர்தியில் வந்த இனந்தெரியாத குழுவினரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரங்கல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.