
ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் எதிர்த் தரப்பு உறுப்பினருக்குமிடையில் கைகலப்பு!
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:-
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி மற்றும் பொதுஜன பெரமுனவின் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது.
அதனையடுத்து அவர்கள் இருவரையும் சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை எண் 79ன் கீழ் அவர்களை வெளியேற்றுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபையிலிருந்து வெளியேற்றுவதற்காக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.