
தமிழ்நாடு ஆறுகாட்டுத் துறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஒரு கோடி ரூபா மதிப்புடைய 9 கஞ்சா மூட்டைகள் தமிழக பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக தமிழக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் இந்த கஞ்சா நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவின் இந்தியப் பெறுமதி 25 லட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.