
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பதாகை தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மறுப்பு தெரிவித்துள்ளது.
இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இந்த குறித்த இழி செயற்பாட்டுக்கும் வாலிபர் முன்னனிக்கும் எந்த தொடர்பும் இல்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் அறிவித்துள்ளார்.