
கொழும்பு, ஏப் 08
அலி சப்ரி தொடர்ந்தும் நிதியமைச்சர் பதவியினை வகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இராஜினமா செய்ததனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலே, நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.