
பராளுமன்றில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பாராளுமன்றத்திற்கு வெளியே பெரும் திரளான பல்கலைக்கழக மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்ட்டு வருகின்றது.
இந் நிலையில் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களை கலைக்கும் பொருட்டு கண்ணீர்ப் புகைக்குண்டு மற்றும் நீர்த் தாரைப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுக்கு மத்தியில் போராட்டம் தற்போது முன்னோக்கி நகர்கின்றது.
இதேவேளை தற்போது ஏராளமான பொலிஸார் இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.