
கொழும்பு, ஏப் 08
ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தையும் பண்டிகை முற்கொடுப்பனவையும் செலுத்துவதற்காக ரூ.9 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாத ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்காக திறைசேரி ரூ.2 ஆயிரத்து 500 கோடி ரஒதுக்கியுள்ளது. சமுர்த்திக் கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் செயலாளர் பிறியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.