மட்டக்களப்பு மாநகரசபை மேயர் உட்பட 4 பேருக்கு தடை உத்தரவு!

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் உட்பட 4 பேருக்கு திலீபன் நினைவேந்தல் நினைவு கூறுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகிய 4 பேருக்கு எதிராக தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நினைகூருவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) தடைஉத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொ.ப.கஜநாயக்கா மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றிற்கு குறித்த நான்குபேரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று 15 ம்திகதி தொடக்கம் எதிர்வரும் 26 ம் திகதிவரை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாகவும்.

இவ்வாறன நிகழ்வு நடந்தால் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு இருப்பதனால் மற்றும் நாட்டில் தற்போது கொரோனாh நோய் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக் இந்த நோய் தொற்று கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார நடவடிக்கையினை நாட்டு மக்கள் கடைப்பிடிக்க அவசியம் இருப்பதனால் இவ்வாறான நினைவு கூறல் நடவடிக்கையை நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை பிரசுரிக்குமாறு மன்னிற்கு அறிக்கை செய்தனர்

இதன் பிரகாரம் பொலிசாரினால் மன்றுக்கு கோப்பிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் பொலிசார் குறித்த இடத்தில் 15ம் திகதி தொடக்கம்26 ம் திகதிவரையில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் மேற்படி நடவடிக்கையினை தடுத்து நிறுத்தும் பொருட்டு தடை உத்தரவை பிறப்பிப்பதற்கு ஏதுக்கள் இருப்பது மன்று திருப்திபடுவதனால் 1979 ம் ஆண்டு 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டகோவையின் பிரிவு (106)1 கீழ் பொலிசார் கோரியவாறு தடை உத்தரவு பிறப்பித்து கட்டளைபிறப்பித்துள்ளது.

இந்த நீதிமன்ற தடை உத்தரவுனை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்;டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *