இலங்கை முழுவதும் கடந்த ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை சேகரிக்கப்பட்ட 150 மாதிரிகளில் 148 டெல்டா வைரஸ் திரிபைக் (B.1.617.2) கொண்டுள்ளமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதில், இரண்டு மாதிரிகள் மட்டுமே அல்பா (பி. 1.1.7) திரிபைக் கொண்டிருந்தன.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை, பேராசிரியர் நீலிகா மாளவிகே மற்றும் டாக்டர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.