பாத­ணி­களை நாக்­கி­னால் துப்­பு­ரவு செய்யச் சொல்­லி­ய அமைச்­சர் லொஹான் ரத்­வத்த!

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­களை இரா­ஜாங்க அமைச்­சர் லொஹான் ரத்­வத்த சுட்­டுக்­கொல்ல முயன்­றமை மற்­றும் அவர்­களை சித்­தி­ர­வதை செய்­தமை தொடர்­பில் சுயா­தீன விசா­ரணைக் குழு அமைக்­கப்­பட்டு விசா­ர­ணை­கள் முன்­னெ­ டுக்­கப்­ப­ட­வேண்­டும்.
ஜனா­தி­பதி இத்­த­கைய விசா­ர­ணைக்­கு­ழுவை நிய­மிக்­கும்வரை அனைத்து தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் நாடா­ளு­மன்ற அமர்­வு­களை புறக்­க­ணிக்­க­வேண்­டு­மென தமிழ் அர­சி­யல் கைதி­க­ளது குடும்­பங்­கள் அழைப்பு விடுத்­துள்­ளன. இது தொடர்­பில் அவர்­கள் ஊடக சந்­திப்­பில் தெரி­வித்­த­தா­வது:

வழக்­கம் போல ஊடக அறிக்­கை­களை விடுத்து பின்­னர் ஓய்ந்து போவது எமது தலை­வர்­க­ளது பண்­பா­டா­கும். அவ்­வா­றில்­லா­மல் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வேண்­டும். கைதி­க­ளது நலன்­களை பாது­காக்­கும் ஒரு அமைச்­ச­ராக இருந்­த­வா­று எமது பிள்­ளை­கள் மற்­றும் குடும்ப அங்­கத்­த­வர்­கள் மீது தனது சக­பா­டி­கள் சகி­தம் மது­போ­தை­யில் அது­வும் இரவு நேரத்­தில் இராஜாங்க அமைச்சரால் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றை­கள் அதிர்ச்­சியைத் தந்­துள்­ளது. அக்­கும்­பல் எமது பிள்­ளை­களை தமது பாத­ணி­களை நாக்­கி­னால் துப்­பு­ரவு செய்யச் சொல்­லி­யி­ருக்­கின்­ற­னர்.

எமது உற­வு­களை உயி­ரு­டன் பாது­காக்க முத­லில் அவர்­களை யாழ்ப்­பா­ணம் சிறைக்கு மாற்­ற­வேண்­டும். அதற்கு முன்­ன­தாக அவர்­கள் தொடர்­பி­லான வழக்­கு­கள் உள்ள நீதி­மன்­றங்­க­ளில் அவர்­களை முற்­ப­டுத்தி நடந்­த­வற்றை வெளிப்­ப­டுத்த வேண்­டும். கைதி­கள் நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளுக்­கா­கவே சிறை­க­ளில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவ்­வ­கை­யில் அவர்­களை பாது­காக்க வேண்­டி­யது இலங்கை நீதி­மன்­றங்­க­ளது கடமை.
இதே­வேளை தமிழ்க் கட்­சி­க­ளது பிர­தி­நி­தி­கள் குழு­வொன்று உட­ன­டி­யாக அநு­ரா­த­பு­ரம் சிறைக்கு பய­ணம் செய்து நேரில் தமிழ் அர­சி­யல் கைதி­க­ளது நலன்­களை முத­லில் கண்­கா­ணிக்­க­வேண்­டும்.

ஐ.நா. வில் 16 அர­சி­யல் கைதி­க­ளது விடு­தலை பற்றி வெளி­வி­வ­கார அமைச்­சர் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருக்க சிறை­யி­னுள் கைதி­களை அமைச்­சரே கொல்ல முற்­ப­டு­கின்ற அவ­லம் இங்­கேயே நடந்­தி­ருக்­கின்­றது, என்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *