ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் முதன்மையான கால்பந்து லீக் தொடரான சம்பியன்ஸ் லீக் தொடரின், முதற்கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
குழு டி பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், ரியல் மட்ரிட் அணியும் இன்டர் மிலான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
சேன் சிரோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ரியல் மட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
இதில் ரியல் மட்ரிட் அணி சார்பில், ரொட்றிகோ போட்டியின் 89ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
குழு ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியும் ப்ரூஜ் அணியும் மோதின.
ஜோன் ப்ரெய்டெல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதில் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சார்பில், ஆண்டர் ஹெர்ரா 15ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ப்ரூஜ் அணி சார்பில், ஹென்ஸ் வனகென் போட்டியின் 27ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
குழு பி பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், லிவர்பூல் அணியும் ஏசி. மிலான் அணியும் மோதின.
என்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 3-2 என்ற கோல்கள் கணக்கில் லிவர்பூல் அணி வெற்றிபெற்றுள்ளது.
லிவர்பூல் அணி சார்பில், மொஹமட் சாலா போட்டியின் 48ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஜோர்தான் ஹென்டர்சன் 69ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். மிலான் அணியின் வீரரான டோமோரி போட்டியின் 9ஆவது நிமிடத்தில் ஒரு ஓன் கோல் அடித்துக்கொடுத்தார்.
மிலான் அணி சார்பில், என்டி ரெபிச் 42ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், பிராஹிம் டயஸ் 44ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
குழு ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், மன்செஸ்டர் சிட்டி அணியும் ஆர்.பி. லெய்ப்ஸிக் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
மன்செஸ்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 6-3 என்ற கோல்கள் கணக்கில் மன்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெற்றது.