சீனி இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனி இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் ஜெனரல் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, சீனி இறக்குமதி நிறுத்தப்பட்டு சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது
தற்போது இரண்டரை மாத கால நுகர்வுக்கு நாட்டில் சீனி கையிருப்பில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்ததாக ஜெனரல்நிவுன்
ஹெல்ல மேலும் தெரிவித்தார்.
இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு போதே அவர் இதனை தெரிவித்தார்.






