யாழ்ப்பாணம், தென்மராட்சியின் வரணி குடமியன் பகுதியில் இரண்டு வெடிகுண்டுகள் காணப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாராலும் படையினராலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த பகுதியில் தனியார் தோட்டக் காணி ஒன்றில், இரண்டு மர்மப் பொருட்கள் இருப்பதாக நேற்று மாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு சென்ற பொலிஸார் அதனைப் பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்கவைக்கும் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, படையினரும் பொலிஸாரும் அங்கு பிரசன்னமாகி அதனை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறி்த்த வெடிபொருளின் மேலாக கப்டன் (ஐயா) 99 தகர்ப்பு வெடி மருந்து எனப் பெயரிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அதில் சில எழுத்துக்கள் அழிவடைந்து காணப்படுகின்றமையால் முழுமையாக வாசித்து அறிய முடியவில்லை.
அவை தமிழீழ விடுதலைப்புலிகளின் பாவனையில் இருந்தவையாக இருக்கலாம் என்றும் சந்தேகிகக்கப்படுகிறது.