பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியர் விடுதி

வட மாகாண Psdg திட்டத்தின்கீழ் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் இடம் பெற்றது.

இத்திட்டம் 60 மில்லியன் ரூபா செலவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்கல் நாட்டுவதற்கான கிரியைகளை ஆதார வைத்தியசாலை ஆலய குரு முதல்வர் சி.இந்திரராஜகுருக்கள் மேற்கொண்டார்.

தொடர்ந்து, மருத்துவ மனை பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன், நிர்வாக உத்தியோகத்தர் வான்மதி ஜெயதாஸ், தாதிய பரிபாலகி குமுதமலர் ரவீந்திரன், மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மருத்துவ மனை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் நாட்கல் நாட்டி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *