கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு மின்னஞ்சல் வந்ததை தொடர்ந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி விமான நிலையங்கள் உட்பட அரசு கட்டிடங்கள் பலவற்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்படும் என்றும், தாங்கள் பெயர் கூறுகின்ற நான்கு நபர்களை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குறித்த மின் அஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மின்னஞ்சலை சோதனைக்கு உட்படுத்தி இருந்த போது, சந்தேகநபர்கள் விமான நிலைய வலைத்தளத்திலிருந்து தரவைத் திருடுவதற்காக அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தில் இதைச் செய்தார்களா? என்பது தற்போது தெரியவந்துள்ளது.
வங்காளதேச இராணுவத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் இணையதளத்தை ஒரு ஹேக்கர் தாக்கி அதனூடாக , இந்த மின்னஞ்சல் செய்தி இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை மின்னஞ்சல்களுடன், கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவசர சந்தர்பங்களின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






