கொரோனா தொற்றினால் இறந்த ஒருவரின் உடலை சுடுகாட்டிற்கு முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை பகுதியை நோக்கி எடுத்துச் சென்ற சிறிய லொரி நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது காயமடைந்த வாகனத்தின் சாரதி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா தொற்று உடலினை வேறு ஒரு சாரதியுடன் சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






