திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை வூட்டன் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஏ.தங்கவேல் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இவர் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலிம், நுவரெலியா நீதிமன்றத்தின், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






