ஈழத்தின் மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்.!

ஈழத்தின் மிக முக்கியமான மூத்த எமுத்தாளர் நந்தினி சேவியர் (வயது – 72) இன்று (16) திருகோணமலையில் காலமானார்.

யாழ்ப்பாணம் மட்டுவில் சாவக்கச்சேரியில் 1949-05-25 ல் பிறந்த இவர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவர் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலக்கியமே மூச்சு, வாசிப்பு என்று வாழ்ந்து கொண்டிருந்தவர்.

கொடகே தேசிய சாகித்திய விருது , கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, கலாபூசணம் அரச உயர் விருது ஆகிய உயர் விருதுகளை பெற்றவர்.

அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் , நெல்லிமரப்பள்ளிக்கூடம் இரண்டும் அவரது மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள்.

ஈழத்து இலக்கியத்தை எமுதும் எவரும் நந்தினி சேவியர் என்ற பெயரை தவிர்க்கவியலாது என்பதே அவரது அடையாளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *