சந்தனமடு ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு

மட்டக்களப்பு, செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி, மூன்று கிராம சேவகர் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றில் அண்மைய தினங்களாக இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகளப்பட்டு வருவதாக தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், இன்று காலை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டமையுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளார் .

மேலும், இவ் மண் அகழ்வு காரணமாக பாரிய விபரீதத்துக்கு அந்த மக்கள் முகம் கொடுக்க நேரிடும் என்றும், இது உடனடியாக நிறுத்தப்பட்டு குறித்த இடத்தில் எடுக்கப்பட்ட மணலை அவ்விடத்தில் மீளவும் கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

இந்த ஆற்றில் 2015 ஆம் ஆண்டில் இருந்து தற்பொழுது வரைக்குமான காலப்பகுதியில் மணல் அகழ்வு இடைநிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, மணல் அழ்வை தடுக்க வேண்டும் எனத் தொரிவித்து அக்காலப் பகுதியில் 11 இளைஞர்கள் சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரதம் இருந்து மணல் அகழ்வை நிறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *