யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாவிட்டபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த வீதியோரத்தில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் அடி காயங்களுடன் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றும் 03 சோடி செருப்புக்களும் காணப்பட்டுள்ளன. ஆணின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவர் தெல்லிப்பழை, நல்லிணக்கபுரத்தினைச் சேர்ந்த 22 வயதுடைய மதியாபரணம் ஜெனூசன் என்றும் இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் தெரியவந்துள்ளது
மல்லாகத்தில் நடைபெற்ற மரணச் சடங்கு ஒன்றுக்குச் சென்றிருந்தவரே அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.






