இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து செல்லும் வேளை வடக்கிலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்கின்றன.
வடக்கில் 278 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை இட்ம்பெற்ற இதேவேளை வடக்கு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அத்தோடு வடக்கில் 7பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில்
யாழ்.மாவட்டத்தில் 26 பேர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 11 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், நொதேர்ன் சென்றல் வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 03 பேர் எனவும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பேர்
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 05 பேர், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவருமாக
வவுனியா மாவட்டத்தில் 10 பேர்
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 07 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், வவுனியா விமானப்படை முகாமில் ஒருவருமாக
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்களை நீடிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தின் போது எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






