பட்டதாரி பயிலுநர்களுக்கு 3 மாதங்களுக்குள் நியமனம்!

பட்டதாரி பயிலுநர்களுக்கு 3 மாதங்களுக்குள் நியமனம்!

பயி­லு­நர்­க­ளாக இணைத்­துக் கொள்­ளப்­பட்­டுள்ள 53 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­கள் எதிர்­வ­ரும் மூன்று மாதங்­க­ளில் அரச நிறு­வ­னங்­க­ளில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­னர் என்று அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரும் வெகு­ஜன ஊடக அமைச்­ச­ரு­மான டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்­துள்­ளார்.
நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் மாநாட்­டில் அவர் இத­னைத் தெரி­வித்­துள்­ளார்.

இதே­வேளை, பயி­லு­நர்­க­ளாக இணைத்­துக் கொள்­ளப்­பட்­டுள்ள பட்­ட­தா­ரி­கள், தமக்கு வழங்­கப்­ப­டும் 20 ஆயி­ரம் ரூபா கொடுப்­ப­ன­வில் ஏதே­னும் பிரச்­சினை இருக்­கு­மா­யின் அதனை உரிய பகு­தி­யி­ன­ரின் கவ­னத்­துக்­குக் கொண்­டு­வ­ரு­மா­றும் அவர் கூறி­யுள்­ளார்.
குறித்த பட்­ட­தா­ரி­க­ளுக்கு விரை­வில் தொழில் வழங்­கு­வ­தற்­கான பொறுப்பை ஜனா­தி­பதி ராஜ­பக்ச சில அமைச்­சர்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளார் என்று மேலும் தெரி­வித்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *