குடி நீருக்காய் ஏங்கும் திருமலை மக்கள்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி_01 வள்ளுவர் வீதியில் வசித்து வரும் குடும்பங்களுக்கு குடி நீர் இன்றி வாழ்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 30 குடும்பங்களுக்கான குடி நீர் இன்றி கிணற்று நீரினை குடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 1996 களில் இருந்து தற்போது வரை குடி நீர் இன்மையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அப் பகுதியில் உள்ள கிணற்று நீரினை அருந்துவதால் சிறு நீரக நோய்,வாந்தி பேதி உள்ளிட்ட தொற்றா நோய் ஏற்படுவதாகவும் சிறு பிள்ளைகளுக்கும் இதனால் தாக்கத்தை உண்டுபண்ணுவதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பகுதியில் பிரதான குழாயினை பொறுத்தி தருவார்களேயானால் தாங்கள் சொந்த பணத்தில் குடி நீர் இணைப்பினை பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பல வருட காலம் சுத்தமான குடி நீர் இன்றி அல்லல் படுவதாகவும் இதனால் குடிப்பதற்கும் ஏனைய தேவைகளை நிறைவேற்றவும் குடி நீன் இன்மையால் பல அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளதாகவும் அம் மக்கள் மேலும் கவலை வெளியிடுகின்றனர்.

எனவே தங்கள் பகுதிக்கான குடி நீரினை பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளுக்கு அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *