வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் கடையின் முன்வாயிலை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டது.
நாட்டில் தனிமைப்படுத்தல்ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி குறித்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வியாபார நிலையத்தின் உரிமையாளர் தெரிவிப்பதுடன் குறித்த விடயம் தொடர்பாக வ்வுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாட்டினையும் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






