
யாழ்ப்பாணம்- கொடிகாமம், குடமியன் பகுதியில் உள்ளூர்த் தயாரிப்பு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
ஆட்களற்ற காணியுடனான சிறிய குளத்துடன் உள்ள பற்றைக் காட்டில் குறித்த வெடி குண்டுகள் காணப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர், கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலுக்கமைய அப்பகுதிக்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் மேற்கொண்ட பொலிஸார், குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர்.
இதில் ஒரு குண்டு 15Kg மற்றையது 10Kg நிறையைக் கொண்டது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





