
நாட்டில் அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறையில் இருக்குமா? இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று(17) அறிவிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தேசிய செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதேநேரம், இன்றைய தினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில், பாடசாலைகளை மீளத் திறத்தல் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.





